ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர், துபாய் மன்னர் -மகன் ஷேக் ரஷித் பின் முஹம்மத் மாரடைப்பால் மரணம், ! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34. ஐக்கிய நாடுகளின் பிரதமரும், துணைக் குடியரசுத் தலைவரும், துபாயின் மன்னருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்துமின் மூத்த மகன், ஷேக் ரஷீத் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தும்.

34 வயதான இவர் குதிரையேற்றம் , கால்பந்து விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.

483569_1 3523314190_750baeacae download

அமீரகத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

மாரடைப்பு காரணமாக, இன்று காலை அவர் மரணத்தை தழுவினார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, துபாயில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

எமிரேட்ஸ் நாடுகளில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். “நாங்கள் அல்லாவுக்கு உரித்தானவர்கள், அவரிடமே திரும்ப வேண்டியவர்கள்” என்று துபாய் மன்னர் அலுவலகம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

226777e0-5ea1-11e5-8738-5bcf5ccf7aef_fdsfasdf


1546023_1007381112615189_8952620086957247738_n 11108954_1007381065948527_8415344817733276992_n 11237566_1007381185948515_2451678360306472298_n 11391193_1007381069281860_7932705175728384857_n 11393066_1007381119281855_8528366907110703271_n 11393270_1007381125948521_8303153442880474670_n 11403475_1007381122615188_8685687526976492816_n 11406843_1007381189281848_5882865555572725080_n 11407279_1007381105948523_3441559250051417526_n 11427191_1007381072615193_6737834005199849208_n


கச்சா எண்ணை விலை ,ஒரு விழிப்புணர்வு பார்வை
விலை ஏறினால் மட்டும் மக்களுக்கு விலையேற்றம் செய்யும் எண்ணை நிறுவனங்கள் , விலை குறையும் பொழுது விலை குறைப்பு பற்றி வாய்மூடி கொள்ளையில் ஈடுபடுவது ஏன் ???
இதனை பற்றி அரசியல்வாதிகள் வாய் திகாதது ஏன் ??
Inline image 1
கடந்த ஜூலைஇல்  பேரெல் விலை  105 $( ஒரு பேரெல் என்பது 159 லிட்டர் ஆகும்)
இப்பொழுதைய பேரெல் விலை  82.75 $
அதாவது 22.25 $ ஒரு பேரெலுக்கு என்று விலை குறைந்து உள்ளது .
லிட்டருக்கு கணக்கு பார்த்தல் 0.139937 $ விலை குறைந்துள்ளது .
சரி இன்றைய $ இந்திய ரூபாயில் மதிப்பு 61.46 ஆகும்.
அப்படியானால் நமது  என்னை நிறுவனங்கள் விலையை குறைக்க வேண்டிய அளவு என்னவென்றால் லிட்டருக்கு 8.600535 ருபாய்க்கள் குறைத்திருக்க வேண்டும் ,
குறைக்காமல் கொள்ளையில் ஈடுபட்டுகொண்டிருகின்றன.
இதனால் லாபமடைவது எண்ணை நிறுவனங்கள் மட்டுலமல்ல , அதற்கு மறைமுக  ஆதரவு கரம் நீட்டும் அரசியல் வாதிகளும் தான்,
பாதிக்கபடுவதோ சாதாரண மக்கள்  தான் .

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘நிர்பய் ஏவுகணை’யை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் சார்பில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்பய் ஏவுகணை உருவாக்கப்பட்டது.

அணு ஆயுதங்களைச் சுமந்துகொண்டு, நிலத்தில் இருந்து 1000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல இந்த ஏவுகணை, ஒடிஸாவின் பாலாசோரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

NIRBHAY_2159776fநிலம், போர் விமானம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றில் இருந்து தாக்கக்கூடிய வகையில் நிர்பய் ஏவுகணைகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் நிலத்தில் இருந்து தாக்கக் கூடிய வகையில் இரண்டாவது முறையாக சோதனை செய்யப்பட்டது. இந்த வகையிலான ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைவிட சற்று குறைவான வேகத்தில், 1,500 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியவையாகும்.

முன்னதாக நிர்பய் சோதனை முயற்சி கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் கடுமை காட்டியும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அளித்த உறுதி மொழியை மட்டும் நம்பி ஜாமீன் வழங்கியுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்து ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவ உள்ளிட்டோரின் 4 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18.12.2014 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
  • ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.
  • கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் 18.12.2014க்குள் மேல்முறையீட்டு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அது 35,000 பக்கமோ 40,000 பக்கமோ தாக்கல் செய்தாக வேண்டும்.
  • 18.12.2014ம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.
  • இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர் நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
  • நீதிபதி குன்ஹா கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது. நீதிபதி குன்ஹா மட்டுமல்ல நானும் (தத்து) ஒரு கன்னடர்தான்.
  • நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ எந்த ஒரு விமர்சனத்தையும் அதிமுகவினர் முன்வைக்கக் கூடாது.
  • தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் சகிக்க முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.
  • இதற்கு மேலும் நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது அப்படி விமர்சனங்களை முன்வைப்பது அல்லது வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
  • பாலி நாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?
அப்துர் ரஹ்மான், சையது அபுதாஹிர் மற்றும் பலர்

ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களும், ஆதரவாகக் கருத்து சொல்பவர்களும் எல்லை மீறி உண்மைகளை மறைத்து கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

உடனடியாக கருத்து சொன்னால், இரண்டில் ஒரு கருத்துடையவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்து விடுவார்கள்.

அவரவர் தமக்கு சாதகமான கருத்தை மட்டும் எடுத்துக் காட்டி தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு என்று சிலரும், எதிர்ப்பு என்று சிலரும் திசைதிருப்பி விடுவார்கள்.

இப்போது அனைவரும் நிதானத் துக்கு வந்துள்ள நிலையில் நம் கருத்து உரிய முறையில் புரிந்து கொள்ளப்படலாம் என்று கருது கிறோம்.

ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதில் எந்தப் பழிவாங்குதலும் இல்லை என்பதுதான் உண்மை.

1991களில் ஜெயலலிதா முதல் வராக இருந்தபோது மக்களால் வெறுக்கப்படும் வகையில் ஆட்சி நடத்தினார். இதன் காரணமாகவே அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு படுதோல்வியைப் பரிசளித்தனர்.

சுதாகரன் என்பவரை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொண்டு, அவருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்ததும், அந்தத் திருமணத்தை அந்தக் கால மகாராஜாக்களை மிஞ்சும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் படு ஆடம்பரமாக நடத்தியதும், கடந்த திமுக ஆட்சியில் மற்றவர்களின் சொத்துக்களை எப்படி அபகரித்தார்களோ, அதுபோல் பல சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதையும் யாரும் மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்தில் செய்த ஊழலுக்காகத்தான் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது மக்கள் அதிக வெறுப்பு கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தத் தீர்ப்பு வந்திருந்தால் மக்கள் நிச்சயம் அதைக் கொண்டாடி இருப்பார்கள்.

ஒரு சம்பவம் நடக்கும்போது மக்களுக்கு இருந்த உணர்வு காலப்போக்கில் மாறிவிடும்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் அவர் கொல்லப்பட்டு ஓரிரு வருடங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு இருந்தால் அதற்கு மக்களிடம் மகத்தான வரவேற்பு இருந்திருக்கும். அதைக் கண்டித்து யாரும் வாய் திறக்க முடியாத அளவுக்கு கொலையாளிகள் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. ஆனால் தாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் அந்த நிலை மாறிவிட்டது.

நமது நாட்டில் குற்றம் நடந்து இருபது ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு அளிக்கப்படுவது சாதாரணமாகி விட்டது. இதனால் அந்தத் தீர்ப்பு நீதியானது அல்ல என்று மக்கள் கருதும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அந்த வகையில்தான் ஜெயலலி தாவுக்கு எதிரான தீர்ப்பும் மக்களால் பார்க்கப்படுகிறது. பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லாம் வெளியே இருக்கும்போது ஜெயலலிதாவை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம் என்பதுதான் அதிகமான மக்களின் கருத்தாக மாறியுள்ளது. இதற்கு தீர்ப்பை தாமதப்படுத்தும் நீதிமன்ற நடைமுறைதான் காரணம்.

1991 களில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாதம் ஒரு ரூபாய்தான் சம்பளமாக எடுத்துக் கொண்டார். அவர் முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வாங்கிய சம்பளம் வெறும் 60 ரூபாய்கள்தான். ஆனால் அவர்மீது திமுக ஆட்சிக்கு வந்து தொடுத்த வழக்கில் அவருக்கு 66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதற்கான ஆதாரங்களைத் திரட்டி வழக்கை நடத்தியது.

66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கு ஜெயலலிதாவால் நீதி மன்றத்தில் தக்க பதில் சொல்ல முடியவில்லை. இதற்காகவே அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை போன்ற வழக்குகள் சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படும். சாட்சிகள் விலை பேசப்பட்டால், அல்லது மிரட்டப் பட்டால் சாட்சிகள் பல்டி அடித்து விடுவார்கள். இதனால் குற்றவாளிகள் பெரும்பாலும் தப்பி விடுவார்கள்.

ஆனால் சொத்து சேர்த்தல் வழக்குக்கு சாட்சிகளைவிட ஆவணங்கள்தான் முக்கியமானவை. சாட்சிகள் துணை ஆதாரங்களாகத் தான் நிறுத்தப்படுவார்கள்.

ஜெயலலிதா பெயரில் பல சொத்துக்கள் வாங்கி, சட்டப்படி அது பதிவும் செய்யப்பட்டு இருக்கும் போது அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும்.

அதுபோல் அவர் பெயரில் உள்ள 66 கோடி சொத்துக்களுக்கு வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டிய ஆதாரங்களை அவர் காட்ட வேண்டும். இதுபோல் தன் மீது வழக்கு தொடரப்படும் என்று அவர் நினைத்துப் பார்க்காததால் அதற்காக வரி கட்டவில்லை. எனவே அந்த ஆதாரங்களை அவரால் காட்ட முடியவில்லை.

இப்படி ஆவணங்கள் சான்றாக நிற்கும் வழக்குகளில் முடிவு இப்படித்தான் இருக்கும்.

நாட்டை ஆண்ட காங்கிரசுக்கு மிக நெருக்கமாக இருந்தும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார். சிறையில் அடைக் கப்பட்டார்.

மத்திய அரசையே ஆட்டிப்படைத்த திமுக தலைவரின் மகள் கனிமொழியும், மத்திய அமைச்சராக இருந்த ராஜாவும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் ஊழல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு அளிக்காமல் விசாரணைக் கைதிகளாக அவர்கள் அடைக்கப்பட்டதை திமுகவால் தடுக்க முடியவில்லை. உடனடியாக ஜாமீனில் கூட கொண்டு வரமுடியவில்லை.

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் காரணம் இவர் களுக்கு எதிராக ஆவணங்கள் இருந்தன என்பதுதான்.

இந்த வகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு சட்டப் படியானதுதான்.

ஆனால் இன்னொரு வகையில் பார்த்தால் இந்தத் தீர்ப்பு அநியாயமானது.

ஜெயலலிதா ஊழல் செய்த போது அந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை சட்டத்தில் இருந்ததோ அதன்படிதான் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் உடனடியாக எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளை இழப்பார்கள் என்பதும், அமைச்சர் பதவியை இழப்பார்கள் என்பதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப் பட்ட சட்டமாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சட்டத்தின்படி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த குற்றத்துக்குத் தண்டனை விதிப்பது நீதிக்கு எதிரானதாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் முன்னர் நடந்த குற்றங்களுக்கு இப்போது உள்ள சட்டப்படி யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று பிரகடனம் செய்தார்கள்.

இதுதான் சரியான நீதியாகும்.

ஆனால் நம்முடைய நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கும், சட்டம் இயற்றுவோருக்கும் இந்த நியாயம் புரியவில்லை.
எதையும் முன் தேதியிட்டு நடை முறைப்படுத்தும் அநியாயத்தை சாதார ணமாகச் சட்டமாக்கி விடுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழலுக்கு அபராதம்தான் தண்டனையாக விதிக்கப்பட்டது. பதவி பறிப்போ தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தண்டனையோ அப்போது இருக்கவில்லை.
அப்படி ஒரு சட்டம் 1990களில் இருந்திருந்தால் ஜெயலலிதா இந்த அளவுக்கு வெளிப்படையாக, தக்க ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்திருக்க மாட்டார். அவர் மீது வழக்கும் வந்திருக்காது.
இந்தியாவில் திருடினால் தலையை வெட்டுவதாக இப்போது ஒரு சட்டம் இயற்றினால் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகுதான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டுக்கு இத்தண்டனையை அளிப்பது சரியான நீதி இல்லை.
தலை வெட்டப்படும் என்ற சட்டம் அப்போதே இருந்திருந்தால் அவன் திருடாமலே இருந்திருப்பான். ஆறுமாதம் ஜெயிலில் சோறு போடுவார்கள் என்ற சட்டம் காரணமாகவே அவன் திருடினான்.
முன் தேதியிட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அநியாயத்தை அநியாயம் என்று உணராத நாட்டில் இதுபோல்தான் தீர்ப்புகள் அளிக்கப்படும்.
முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குகளின்போது மட்டும் இவர்களுக்கு இந்த நியாயம் சரியாகப் புரிகின்றது.
உதாரணமாக தடா, பொடா சட்டங்கள் இந்த நாட்டில் இருந்த போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்தப் பிரிவுகளின் கீழ் முஸ்லிம்கள் பலர் மீது வழக்கு போடப்பட்டது.
பின்னர் இந்தக் கருப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டன. இந்தச் சட்டம் நீக்கப்பட்டாலும், மேற்கண்ட சட்டங்கள் அமுலில் இருந்தபோது இந்த வழக்குகள் போடப்பட்டதால் அவை தடா, பொடா சட்டங்களின்படியே விசாரிக்கப்படும் என்று நீதிமன்றங்கள் கூறிவிட்டன.
சட்டம் இயற்றப்பட்ட தேதிக்கு முன்னர் நடந்தவை புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படாது என்று இதற்கு நியாயம் கற்பித்தனர். அதே பார்வை தான் எல்லா சட்டங்களுக்கும் இருக்க வேண்டும். அனேகமாக முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் இவர்களே ஒப்புக் கொண்ட நியாயத்தை வழங்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கிறோம்.
இவ்வளவு தாமதமாக தீர்ப்பு அளிக்கலாமா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டினால் இந்த வழக்கு தாமதமானதற்கு ஜெயலலிதாதான் காரணம் என்று சிலர் பதிலளிக்கின்றனர்.
யார்மீது வழக்கு போட்டாலும் தீர்ப்பு அவர்களுக்குப் பாதகமாக வரும் என்று தெரிந்தால் எப்படியாவது இழுத்தடித்து தீர்ப்பை தள்ளிப்போட முயற்சிப்பது இயல்பானதுதான். யாராக இருந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள்.
அவர் தள்ளிப்போடுவதற்காக சட்டப்படியான முயற்சிகளைத்தான் செய்தார். சட்டம் சரியில்லாததால் தான் அவரால் இழுத்தடிக்க முடிந்தது. அவர் இழுத்தடிக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் என்று நீதிபதியால் உத்தரவிட முடியாத அளவுக்கு சட்டம் பலவீனமாக உள்ளது.
காலண்டரைப் பார்த்து விட்டு எந்த ஊரிலாவது கருப்பனசாமி கோவில் திருவிழா என்று போடப்பட்டு இருந்தால், அந்த விழாவிற்க்கு என் கட்சிக்காரர் செல்ல வேண்டும் எனக் கூறி வழக்கறிஞர்களால் வாய்தா வாங்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு எந்தக் காரணமும் சொல்லக் கூடாது என்று சட்டம் இயற்ற வக்கில்லாமல் இருக்கும்போது அதை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் பயன்படுத்தவே செய்வார்கள்.
தயாளு அம்மாள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க, அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி கருணாநிதி நீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் முட்டாள்களாக ஆக்கவில்லையா? அதுபோல்தான் இதுவும்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்வோர் இலட்சக்கணக்கில் ஊழல் செய்த கருணாநிதி குடும்பத்தை வெளியில் விட்டு விட்டு ஜெயலலிதாவை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? என்று கேட்கின்றனர்.
கருணாநிதி, ஜெயலலிதாவை விட பன்மடங்கு ஊழல் செய்தவர் என்பது நாட்டில் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.
எம்ஜிஆரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரமும் கருணாநிதி செய்த ஊழல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டி பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்துக்கு கொண்டு சென்று சர்க்காரியா கமிஷன் அமைக்க வைத்தனர்.
கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சர்க்காரியா அறிக்கை கொடுத்த பிறகு இந்திரா காந்தியின் காங்கிரசுக்கு அதிக சீட்களைக் கொடுத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக் கூறி காலில் விழுந்து, சட்ட நடவடிக்கையில் இருந்து கருணாநிதி தன்னைக் காத்துக் கொண்டார்.
மேலும் எந்த வழக்காக இருந்தாலும் அவர் தன்னைக் காத்துக் கொள்ள எல்லாவிதமான இழிநிலைக்கும் சென்று தன்னைக் காத்துக் கொள்வார்.
எனவே சட்டப்படி கருணாநிதி ஊழலுக்காகத் தண்டிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி தண்டிக்கப்பட்ட வழக்கை, தண்டிக்கப்படாத வழக்குடன் இணைத்துப் பேச முடியாது.
2ஜி வழக்கில்தான் கருணாநிதி குடும்பத்தில் பலர் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அது தீர்ப்பு வந்த பின்னர்தான் உறுதியாகத் தெரியும்.
இப்போது ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சரியான முறையில் கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து வழக்கு நடத்தி இருந்தால் தனக்கு வழங்கப்பட்ட இது போன்ற தீர்ப்பை கருணாநிதிக்கும் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் அவர் யாருடைய யோசனையையும் கேட்பதில்லை.
அதிமுகவினர் இந்தத் தீர்ப் புக்கு எதிராக கடையடைப்பு வன் முறைகளில் இறங்குவதை ஏற்க முடியாது. பாபர் மஸ்ஜித் வழக்கில் மூன்று கிறுக்கன்கள் நீதிபதிகளாக அமர்ந்து நீதியைக் குழி தோண்டிப் புதைத்தது போல் எவ்வித ஆதாரமும் இல்லாமல் இந்தத் தீர்ப்பு அளித்து இருந்தால் அவர்களின் கண்டனத்தில் நியாயம் இருக்கும். இப்போது இதைக் கண்டிப்பதில் நியாயம் இல்லை. அவர்கள் சட்டப்படி இதற்கு எதிராகப் போராடலாம்.
தீர்ப்பு சட்டப்படியானது என்றாலும் ஜெயலலிதாமீது அனுதாபம் அதிகமாக உள்ளதை மறுக்க முடியாது. அதிமுகவினர் பொதுமக்களுக்கு அளிக் கும் இடையூறுகள் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும்.
நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு சட்டப்படியானது என்றாலும் அவரது தீர்ப்பில் சந்தேகம் கொள்ள சில அம்சங்கள் உள்ளதை நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும்.
சஹாரா குழுமத்தின் நிறுவனர், மக்களிடம் நிதி திரட்டி மோசடி செய்துள்ளார் என்ற வழக்கில், அவரைக் கைது செய்தனர். ஆனால் மக்களிடம் நிதியைத் திருப்பித் தர வசதியாக, அவரது லண்டன் சொத்துக்களை சிறையில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விற்க நீதிமன்றம் அனுமதித்தது.
வீடியோ கான்பரன்ஸி வசதிகள் செய்யப்பட்டு புருனை சுல்தானுக்கு லண்டன் அரண்மனை, விலை பேசப்பட்டது. மக்களின் பணத்தைத் திருப்பித்தர இதை விட்டால் வழி இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜெயலலிதா அவர்கள் சாதாரண குடிமகள் அல்ல. அவர் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்ற மாநில முதல்வர் ஆவார். அவரது பதவியைப் பறித்தால் மிகப்பெரும் மாநில நிர்வாகத்தில் வெற்றிடம் ஏற்படும். சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும். அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படும்வரை யாருடைய உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற குழப்பம் வரும் என்ற பொது அறிவு நீதிபதி குன்ஹாவுக்கு இல்லை என்றுதான் தெரிகிறது.
பொது அறிவுள்ள நீதிபதி என்றால் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஜெயலலிதா அவர்கள் குற்றவாளி என்ற தீர்ப்பை மட்டும் அளித்து விட்டு அவர் மாற்று அரசுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் அளித்து பின்னர் தண்டனையை அறிவித்து இருக்கலாம்.
அல்லது உடனே சிறையில் அடைப்பது என்றால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் அமைச்சர்களுடன் உரையாட சிறையில் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு இருந்தால் நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டு இருக்காது. சட்டம் ஒழுங்குப் பிரச்சனையும் வந்திருக்காது.
சஹாரா குழுமத்தின் நிதிப் பிரச்சனையைவிட ஒரு மாநில நிர்வாகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் ஒரு நீதிபதிக்குத் தெரியவில்லை. ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முடிவும் எடுக்க மாட்டார்கள் எடுக்க முடியாது என்பது உலகத்துக்கே தெரியும். இந்த பொது அறிவு கூடவா ஒரு நீதிபதிக்கு இல்லாமல் போய்விட்டது?
முதல்வர் பதவி காலியானால் மாற்று ஏற்பாடு செய்யும்வரை கவர்னரின் நிர்வாகத்தில் மாநிலம் இயங்கும் என்றாவது அவர் சொல்லி இருக்கலாம்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்று வரும் போது நீதிமன்றங்கள் அடங்கிப் போயுள்ளன. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து பல உதாரணங்கள் உள்ளன. காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சொல்லியும் அதற்குக் கட்டுப்பட மறுக்கும் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதுதான் காரணம்.
அந்தக் காராணம் தமிழக நிர்வாகத்துக்கு ஏன் பொருந்தவில்லை என்ற கேள்விக்கும் பதில் இல்லை
இன்னொரு முக்கியமான விஷயத் தையும் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
தீர்ப்பு இப்படித்தான் வரும் என்பதை ஜெயலலிதா அவர்கள் முன்னரே அறிந்து கொள்ளவில்லை என்று ஊகிக்க முடிகின்றது. அதனால் தான் அவர் மாற்று ஏற்பாடு குறித்து முன்னரே முடிவு எடுக்கவில்லை.
ஜோசியக்காரன் சொன்னதை வைத்து தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தாரா?
வழக்கறிஞர்கள் நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார்களா?
உளவுத்துறை இதை உணரத் தவறிவிட்டதா?
எதுவாக இருந்தாலும் ஜெயலலிதா அவர்கள் தகுதியானவர்களிடம் யோசனை கேட்பதில்லை என்பது தான் அடிப்படைக் காரணம். இதை ஜெயலலிதா எதிர்காலத்திலாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.


வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.

Jayalalithaa_240குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. முதலில் பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார். மேலும் மாலை 3 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் மாலை 5 மணியளவில்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோய்விட்டது.

அதே போல ஜெயலலிதாவின் எம்எல்ஏ பதவியும் உடனடியாக ரத்தாகிவிடும். 4 ஆண்டு சிறை தண்டனை என்பதால் இந்த நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீனும் கிடைக்காது. இதனால் நீதிமன்றத்தில் இருந்து அப்படியே சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்படுகின்றனர். இவர்கள் அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தான் ஜாமீன் கோர முடியும். ஆனால், அக்டோபர் 5ம் தேதி வரை தசராவுக்காக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் மறியல்:

பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். திருமங்கலம் அ.தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். திருசெந்தூரில் இருந்து பழநி சென்ற பாசஞ்சர் ரயிலை மறித்ததால், அந்த ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர், இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. மயிலாடுதுறையில் கோர்ட் தீர்ப்பை கண்டித்து அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. கோவில்பட்டியில் தனியார் பஸ் மீது கல் எறிந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது,துறையூரில், கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து, அ.தி.மு.க.,வினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். பஸ் ஸ்டாண்டில் நடப்பட்டிருந்த தி.மு.க., கொடி கம்பத்தை அகற்றினர். இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தஞ்சாவூரில், பழைய, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிகள் மற்றும் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

பஸ்கள் நிறுத்தம்; கடைகள் அடைப்பு:
பண்ருட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பண்ருட்டியில் இருந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் ரயில் மறியலில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதேபோல், நாகப்பட்டனம் ரயில்வே ஸ்டேஷனிலும் , திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலும் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.மேலூரில் அ.தி.மு.க., தரப்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் தனியார் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர். சிதம்பரத்திற்கு சென்ற பஸ்கள் மீது சிலர் கல்வீச்சு நடத்தினர், இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers