இன்றைய செய்திகளின் கண்ணோட்டம்…..
குஜராத் கலவரம் மோடி மீதான புகார்: புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது
குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்…
பெரியாறு அணை: தமிழக அதிகாரிகளை சிறைபிடித்த கேரள வனத்துறை
பெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் சிறைபிடித்தனர்…
அமைச்சர்கள் பட்டியல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 34 கேபினட் அமைச்சர்கள் இடம்பெறுகிறார்கள். ஏற்கனவே பதவியேற்ற பிரதமர் உட்பட 20 பேர் தவிர மேலும் 14 கேபினட் அமைச்சர்கள் வியாழனன்று பதவியேற்க உள்ளனர்…
இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம் – இஸ்ரேல் கோரிக்கை !! இஸ்ரேல் மீது விசாரணை எப்போது ?
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார ஸ்தாபனமும் உடனடி விசாரணை நடத்தவேண்டுமென இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றாக இருந்த இஸ்ரேல் வேண்டுகோள்…இலங்கையை விட பல கொடிய போர் குற்றங்களை புரிந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் மீது – சர்வதேச விசாரணை எப்பொழுது…
அனைவருக்கும் 2011ல் பல்நோக்கு அடையாள அட்டை : சிதம்பரம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுடன் பயங்கரவாதிகளும் ஊடுருவாமல் இருக்க ஏதுவாக நாட்டு மக்கள் அனைவருக்கும் பல்நோக்கு அடையாள அட்டை வரும் 2011ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட்டு விடும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் …
ஜூலை 5ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் : பொன்முடி
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த ஆண்டு கட்டணமே இந்தாண்டு வசூலிக்க…
25 மே 2009 – அன்று வெளியான செய்திகள்
ஜெட் ஏர்வேஸ் நீக்கிய ஊழியர்களுக்கு பணி நியமனம் தரும் ஏர் இந்தியா!
ஜெட் ஏர்வேஸ் பதி நீக்கம் செய்து வெளியேற்றிய விமானப் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ‘வாடகை’க்கு அமர்த்துகிறது அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா…
பிளஸ் டூ- முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற அரசு
பிளஸ் டூ தேர்வில் தமிழை ஒரு பாடமாகப் படித்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவ-மாணவியருக்கு ரூ. 3.40 லட்சம் பரிசு வழங்கிய முதல்வர் கருணாநிதி, அவர்கள் எந்த கல்லூரியில், எந்த படிப்பிலும் சேர்ந்து படித்தாலும் அதற்கான அனைத்து செலவையும் தமிழக அரசே ஏற்கும் …
இந்தியா ஆயுதங்களை தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு: சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா…
தமிழகத்தில் மழை பெய்யும்-குமரியில் கடல் சீற்றம்!
குமரி கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் குளச்சல், நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதியில் கடல் அரிப்பு தடுப்புசுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர்புகுந்தது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது…
மேற்கு வங்கத்தை நேற்று தாக்கிய அய்லா புயல் – 23 பேர் பலி – 2 லட்சம் இழப்பீடு – பிரதமர் அறிவிப்பு
மேற்கு வங்கத்தை நேற்று தாக்கிய அய்லா புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர், புயலால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் …
24 மே 2009 – அன்று வெளியான செய்திகள்
பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசவல்லர் – பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையா…..
இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது: நிதி அமைச்சர்
இந்தியப் பொருளாதாரம் மிகவும் வழுவாக உள்ளது. மேலும் இந்தியப் பொருளாதாரம் மீட்சித்தன்மை உடையதால் விரைவில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்…..
சென்னை எலியட்ஸ் பீச்சில் படகு கவிழ்ந்தது: 15 பேர் பத்திரமாக மீட்பு
சென்னையில் கடலில் படகு மூழ்கியதில் 15 பேர் மூழ்கினர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.மெரீனா கடற்கரையைப் போலவே, எலியாட்ஸ் பீச்சிலும் பெருமளவு மக்கள் ….
அமைச்சர் பதவி: தி.மு.க காங்கிரஸ் சமரசம்
காங்கிரஸ் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்நததாக தெரிகிறது. இதனால் தி.மு.கவிற்கு 3 கேபினட் அமைச்சர்களும், ஒரு தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர் பதவியும்…
சர்வதேச எதிர்ப்பை மீறி வடகொரியாவில் மீண்டும் அணுஆயுத சோதனை: இந்தியா கவலை
வடகொரியா பூமிக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்தியிருப்பது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று இந்தியா கவலை …