கோத்தபாய , சரத்பொன்சேகாவிற்கு எதிரான வழக்கை ஆதரித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்.
     
 

jones-walterகோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியிருக்கிறது. இன அழிப்பு தொடர்பாக 1000 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையை அமெரிக்காவின் முன்நாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பின் தாக்கல் செய்திருந்தார். 

இதனை அமெரிக்க நீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துள்ள நிலையில், அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் வால்டர். பி. ஜோன்ஸ் இதனை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இவர் தற்போதைய சட்டமா அதிபருக்கு( விசாரனை நடாத்தும் நீதிபதிகளுக்கு) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் இந்த வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவிற்கு எதிரான வழக்கு வெற்றிபெற்றால் , இவர்கள் இருவரும் இலங்கையிலேயே தமது வாழ் நாளை களிக்க நேரிடும். அமெரிக்க குற்றவியல் நீதி மன்றமானது ஜரோப்பிய மற்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளுடன் யுத்தக் கைதிகளை பரிமாறும் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டிருப்பதால், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பட்சத்தில் கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகா ஆகிய இருவரும் அந் நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.