தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, சென்னையில் 80 காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் இட‌மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்பட்டுள்ளனர்.  

செ‌ன்னை அபிராமபுரம் சட்டம் ஒழுங்கு ஆ‌ய்வாள‌ர் சங்கரலிங்கம், நீலாங்கரை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், அபிராமபுரத்தில் குற்றப் பிரிவில் பணியாற்றிய பாஸ்கர், அதே காவ‌ல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டு‌ள்ளனர்.

மயிலாப்பூர் குற்றப் பிரிவு ஆ‌ய்வாள‌ர் சுப்பிரமணியம், மெரினா சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், ஐஸ்அவுஸ் குற்றப் பிரிவு ஆ‌ய்வாள‌ர் அதே காவ‌ல்‌நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும் மாற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இவ்வாறு சென்னை முழுவதும் 80 காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பலர் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ராதாகிருஷ்ணன் நேற்‌றிரவு பிறப்பித்தார்.