நியூயார்க் ( ஏஜென்சி ), வியாழக்கிழமை, 5 மார்ச் 2009   ( 14:01 IST )
தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு சொந்தமான 5 பொருட்களின் அமெரிக்க உரிமையாளர் ஜேம்ஸ் ஓடிஸ் இந்திய அரசு தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் ஏலத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.   

அதாவது இந்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் ஏழை எளிய மக்களின் மருத்துவ உதவிகளுக்கான தொகையை கணிசமாக உயத்தவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

US-GANDHI AUCTIONமகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி, கடிகாரம், காலணி உள்ளிட்ட சில பொருட்களுக்கு தற்போதைய உரிமையாளரான ஜேம்ஸ் ஓடிஸ் அவற்றை ஏலம் மூலம் விற்பனை செய்வதாக அறிவித்தார். 

இதையடுத்து தேசத் தந்தையின் பொருட்கள் ஏலம் விடப்படுவதை இந்திய அரசு தடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அவற்றை இந்திய அரசு ஏலத்தில் வாங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து குரல்கள் எழுந்ததைத் தொடர்ந்து அதற்கான பணிகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஏலத்தை நிறுத்த சில நிபந்தனைகளை விதித்துள்ள ஓடிஸ்,” காந்திக்கு சொந்தமான 5 பொருட்களின் ஏலத்தை நிறுத்தி அந்த பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைக்க சில முன்மொழிவுகளை இந்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். 

இந்திய அரசும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது, இது குறித்த இறுதி ஒப்பந்தப் படிவத்தினை தயாரித்து வருகிறோம், இந்திய அரசு பெருந்தன்மையாக இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்த ஒப்பந்த வரைவை நாங்கள் தற்போது இந்தியாவிற்கு அனுப்பவுள்ளோம், இந்திய அரசு இதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், நியூயார்க்கில் இந்திய தூதரகத்திற்கு எங்கள் நிபுணர்கள் குழுவை அனுப்பி இந்த வரைவு உருவாக்கியுள்ள அனைத்து உணர்வுகள் குறித்த விவரங்களையும் மேலும் சீர்படுத்துவோம் என்று ஓடிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ற்று முன் கிடைத்த தகவல்

மகாத்மா காந்தியடிகளின் உடைமைகளை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா சுமார் 10 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்

(மூலம் – வெப்துனியா)