தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இப்பணியில் சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கோ அல்லது தேவைப்படும் காலம் வரையிலுமோ ஒரு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதையடுத்து இப்பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு சிமென்ட் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள கே.சத்யகோபால் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்யகோபால், நரேஷ்குப்தாவுடன் இணைந்து செயல்படுவார்.

சமீபத்தில்தான் முதல்வர் கருணாநிதி, நரேஷ்குப்தாவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.