மும்ைப பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைதொடர்பாக பாகிஸ்தான் எழுப்பியிருந்த 30கேள்விகளுக்கு இந்தியா பதில் தந்துள்ளது.
அத்துடன், பயங்கரவாதிகளின் மரபணு சோதனைமுடிவுகள், குரல் பதிவுகள் உள்ளிட்டஆதாரங்களையும் கொடுத்துள்ள இந்தியா, விரைவாகநடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைதண்டிக்கும்படி பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.
ஒன்றன்பின் ஒன்றாக எல்லாக் கேள்விகளுக்கானபதில்கள், அவற்றுக்கான ஆதார இணைப்புக்கள்ஆகியவை கொண்ட 401 பக்க தொகுப்பை இந்தியஅயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன்இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித்மாலிக்கிடம் டெல்லியில் நேற்று வழங்கினார்.
கடந்த 2 மாதங்களில் பாகிஸ்தானிற்கு இந்தியாதந்துள்ள இரண்டாவது தொகுப்பான இதில்,மும்பையைத் தாக்கிய 10 பயங்கரவாதிகளுக்கும்அவர்களை இயக்கியோருக்கும் இடையில் நடந்தஉரையாடல் பதிவுகள், பயங்கரவாதிகளின் மரபணுசோதனை முடிவுகள் ஆகியவை கூடுதலாகஇணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறைஅமைச்சர் சிதம்பரம்,
பாகிஸ்தானிடம்தரப்பட்டுள்ள ஆதாரத் தொகுப்புபயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைஎடுப்பதற்குப் போதுமானதாகும். இதை வைத்து, விசாரணையைத் துரிதப்படுத்தி மும்பைத்தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளைக்கண்டுபிடித்து அவர்களைப் பாகிஸ்தான் சட்டப்படிதண்டிக்கவோ அல்லது இந்தியாவிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவோ பாகிஸ்தான்அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாம்எதிர்பார்க்கிறோம்’ என்றார்.