நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணாவின் தீர்ப்பு நகலை எரித்துகீழ்த்தரமாக போராட்டம் நடத்திய வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு நீதியரசர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தகுந்த பாடம் புகட்ட முன்வரவேண்டும் எ‌ன்று காவல‌ர்க‌ள் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்து‌ள்ளனர்.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் நட‌ந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை நகர காவ‌‌ல்துறை கூடுதல்ஆணைய‌ர் ஏ.கே.விஸ்வநாதன், இணை ஆணைய‌ர்ராமசுப்பிரமணி ஆகியோரை த‌ற்கா‌லிக ப‌ணி ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்,த‌‌‌மிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வந்த சிலமணி நேரத்தில் காவல‌‌ர்க‌ள்ஏராளமான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார்கள். இந்த துண்டு பிரசுரங்கள் அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. துண்டு பிரசுரங்களில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் வருமாறு:

வழ‌க்க‌றிஞ‌ர்கள் சட்டம் என்ற இரும்பு தூணை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காவல‌ர்க‌ள்அந்த இரும்பு தூணை காப்பாற்றும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அமைதிப்படை வீரர்கள். எங்களின் அமைதி ஆழ்கடலை போன்றது. ஆனால் அது எந்த நேரத்திலும் சுனாமியாக மாறும்.

* நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணாவின் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்ப்பு நகலை எரித்து வழ‌க்க‌றிஞ‌ர்கள் கீழ்த்தரமாக போராட்டம் நடத்தினார்கள். இதற்கு நீதியரசர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தகுந்த பாடம் புகட்ட முன்வரவேண்டும்.

* சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநிறுத்த காவல‌‌ர்க‌ள் தயாராகிவிட்டார்கள்.வழ‌க்க‌றிஞ‌ர்கள் தயாராவது எப்போது?

* இந்திய தண்டனை சட்டத்தின்படி உயர் நீதிமன்றத்தில்காவல‌ர்க‌ள் தடியடி நடத்தி கடமையை நிறைவேற்றினார்கள்.

* ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான நீதித்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை, சட்டத்துறை ஆகியவை இன்று சில வழ‌க்க‌றிஞ‌ர்களால் வேறோடு பெயர்ந்துவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை காப்பாற்றுவது அனைவரின் கடமையாகும்.

* உயர் நீதிமன்றம் கா‌வ‌ல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழங்கியுள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எ‌ன்றுதுண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.