என்னோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்த அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்க மறுத்துவிட்டார்.

  FILE

தி.மு.க, அ.தி.மு.க இரண்டில் யாருடன் கூட்டணி சேருவது என்பதில் இதுவரை முடிவை அறிவிக்காத பாட்டாளி மக்கள் கட்சி, ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் பேச்சு நடத்தி வந்தது. அ.தி.மு.க.வுடன் பேசும்போது, ‘எங்களுடன் விடுதலை சிறுத்தைகளும் வருவார்கள்’என்று உறுதி அளித்ததாக தெரிகிறது.

 

ஆனால், தி.மு.க கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறார்கள் என்று கருணாநிதி அறிவித்து விட்டார். திருமாவளவனும் முதலமை‌ச்சரைசந்தித்து பேசியபின் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகம் வந்து தன்னை சந்திக்குமாறு திருமாவளவனுக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தாராம். இதை தொடர்ந்து திருமாவளவன் அங்கு சென்றிருக்கிறார். அப்போது, ”நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள். நாம் இருவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து விடுவோம்” என்று ராமதாஸ், திருமாவளவனை அழைத்ததாக தெரிகிறது.

  FILE

ஆனால் திருமாவளவனோ, இந்த அழைப்பை முழுமையாக மறுத்துவிட்டார். ”நான் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர முடியாது. உறுதியாக தி.மு.க. கூட்டணியில்தான் இருப்பேன். முதலமைச்சர் கருணாநிதியுடன்தான் இருப்பேன்” என்று கூறி மறுத்துவிட்டாரா‌ம்.

இலங்கை‌த் தமிழர்கள் பிரச்சனையில் நாம் இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறோமோ, அதேபோல அ.தி.மு.க. கூட்டணியிலும் நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் நன்றாக இருக்குமே” என்று ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலு‌ம் ‘‌நீ‌ங்க‌ள் எ‌ங்களுட‌ன் வர‌வி‌ல்லை எ‌ன்றா‌ல்சிதம்பரம் தொகுதியில் உங்களை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்’ என்று ராமதாஸ் எச்சரித்தாராம். அதற்கு ‘அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.ு.க கூட்டணியும் அதற்கு தயாராகவே இருக்கிறோ‌ம் என்று திருமாவளவன் கூறினாராம்.

பின்பு ராமதாஸ், நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர முடிவு செய்துவிட்டோம் என்று கூறி மீண்டும் மீண்டும் அழைத்தபோதிலும், திருமாவளவன் நான் தி.மு.க. கூட்டணியில் தான் இருப்பேன், முலமைச்சர் கருணாநிதியுடன் தான் இருப்பேன் என்று உறுதியாக கூறினாரா‌ம்.

அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌க்கு வருமாறு ராமதாஸ் அழைப்பை திருமாவளவன் ஏற்க மறுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரு‌ம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.