golgசர்வதேச பங்குச் சந்தைகள் கடந்த ஒரு வாரமாக நல்ல முன்னேற்றம் கண்டுவருவதன் விளைவு, தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் தொடர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து 4-வது நாளாக தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 3-ந்தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1379 ஆக இருந்தது. 

அடுத்தடுத்து ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,339 ஆக குறைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.32 குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.256 குறைந்து 10,712 ஆக விற்பனை செய்யப்பட்டது. இரண்டே நாட்களில் சவரனுக்கு 352 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை இன்று ரூ.21,695 ஆகவும், 1 கிராம் ரூ.23.20 ஆகவும் உள்ளது. 

இந்த நிலையில், சர்வதேச நிதியமைப்பிலிருந்து மேலும் தங்கத்தின் வரத்து சந்தையில் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் தங்கத்தின் விலை குறையும் சூழல் உருவாகியுள்ளது.