அ.இ.அ.தி.மு.க. எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் இத்தகைய செய்திகள் அடிப்படையற்றது என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகுஇ பா.ஜ.க. கூட்டணிக்கு அ.இ.அ.தி.மு.க. ஆதரவை பெறும் வாய்ப்பு இருப்பதாகவும்இ அதற்கான பின்னணி முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியிருந்தார்.
இதை மறுத்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்இ அ.இ.அ.தி.மு.க.வை பொருத்தமட்டில் மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சிஇ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிஇ பா.ம.க.இ ம.தி.மு.க.இ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. அ.இ.அ.தி.மு.க. எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
இத்தகைய செய்திகள் அடிப்படையற்றது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்