kamal-hasanகமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மாவட்ட புதிய நிர்வாகிகள்  நியமனம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு வரவேற்று பேசினார். நற்பணி இயக்கத் தலைவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் கலந்து கொண்டு புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

 

முன்னதாக தர்மபுரியில்  உள்ள தாய்சேய் நல விடுதிக்கு தொட்டில்கள், பேருந்து நிலையத்திற்கு உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் இருசக்கர சைக்கிள், மாதர் சங்கத்திற்கு ரூ. 5000 உதவித் தொகை தமிழ் சங்கத்திற்கு நூல்கள், ரெயில் பதிவு விண்ணப்பங்கள், குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேருக்கு சாரணர் சீருடை 500 எவர் சில்வர் தட்டுகள், 10 மின் விசிறிகள் மற்றும் பீரோக்கள்.

 

வட சென்னை ராயபுரம் பகுதியை சார்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் உதவும் கைகள் அமைப்பிற்கு தையல் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள்  வழங்கப்பட்டன. 

 

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள அப்பகுதி நற்பணி இயக்கத்தின் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 70,000 செலவில் அமைக்கப்பட்ட விழா மேடையின் கல்வெட்டினை   கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.தங்கபாலு, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், தர்மபுரி ரவிசந்திரன், குரோம்பேட்டை மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.