45686333_007203070-1விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கின்ற பகுதிகளில் இருந்து வெளியேறிவரும் மக்கள் வெள்ளத்தில் மேலும் ஆயிரக்கணக்கானோர் இணைந்திருப்பதாக இலங்கை கூறியுள்ளது.

அந்தப் பகுதிகளில் இராணுவத்தினரின் தாக்குதல்கள் தொடருகின்ற நிலையில், திங்கட்கிழமை முதல் அந்த போர்ப்பகுதிகளில் இருந்து சுமார் ஐம்பதினாயிரம் பேர் தப்பி இடைத்தரிப்பு முகாம்களை வந்தடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

பலர் பெரும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விபரித்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மக்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்று கோரியுள்ளது.

பொதுமக்கள் மீது அரசாங்கப் படைகள் எறிகணை தாக்குதல்களை நடத்துவதாகவும், அவர்களது வீடுகளை நிர்மூலம் செய்வதாகவும் விடுதலைப்புலிகள் கூறும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

விடுதலைப்புலிகள் மக்களை பலவந்தமாக தடுப்பதாகவும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாகவும் அரசாங்கம் கூறுகிறது.