இந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்விக் கடனை ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அத்துடன் இந்தியன் வங்கி சார்பில் புதிதாக 200 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் நிறுவப்படும் என்று இந்தியன் வங்கி சேர்மனும் மேலாண்மை இயக்குநருமான எம்.எஸ்.சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கடனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வங்கியின் வைப்புத்தொகை இப்போது ரூ.72 ஆயிரத்து 582 கோடி யாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 19 விழுக்காடு அதிகம். 

சென்ற நிதி ஆண்டில் ஆண்டில் ரூ. 51,466 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 29 விழுக்காடு உயர்வு. 

வீட்டுவசதி கடன் ரூ.5 ஆயிரத்து 96 கோடியே 58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

விவசாயக்கடன் ரூ.7,837 837 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% அதிகமாகும்.

இந்தியன் வங்கி ரத்து செய்த விவசாயக்கடனில் 40% மத்திய அரசு தந்துள்ளது. 

இந்த நிதி ஆண்டில் (2009 ஏப்ரல் முதல் 2010 மார்ச்)அனைத்து கடன்களும், 20 விழுக்காடு அதிகரிக்கப்படும்.

இந்தியன் வங்கி 1,642 கிளைகளுடன் செயல்படுகிறது. இந்த ஆண்டில் மேலும் 100 புதிய கிளைகள் திறக்கப்படும். தற்போது வங்கிக்கு 755 தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்) உள்ளன. இந்த வருடம் புதிதாக 200 ஏ.டி.எம்கள் திறக்கப்படும். 

படிக்க மாணவ-மாணவிகள் உயர் கல்வி கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற நிதி ஆண்டில் ரூ.540 கோடியே 17 லட்சம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 66 ஆயிரத்து 280 மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. 

இந்த வருடமும் சிறப்பாக கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்விக்கடனுக்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்று, ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். கல்வி கடனை விரைந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். கல்விக்கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படாது என்று எம்.எஸ்.சுந்தரராஜன் தெரிவித்தார்.