மனித இனம் இதுவரை கண்டிராத, தொலைதூரத்தில இருக்கின்ற ஒரு பொருளை தாம் புகைப்படம் எடுத்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
13 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு இறக்கும் நட்சத்திரம் வெடித்து சிதறிய காட்சி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து இந்த அளவுக்கு வெகு தூரத்தில் நடக்கும் ஒரு சம்பவம் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நட்சத்திரம் வெடித்து சிதறும் நிகழ்வு, காமா கதிர்வீச்சை கண்டறிய அனுப்பப்பட்ட அமெரிக்க செயற்கைக் கோள் ஒன்றால் முதலில் கண்டறியப்பட்டது.
அதன் பிறகு தரையில் இருக்கும் தொலை நோக்கிகள் மூலம் விண்ணில் குறிப்பிட்ட இடத்தை பார்த்த போது, மங்கி வரும் ஒளியை காணக் கூடியதாக இருந்தது.
நன்றி : பி பி சி