தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மதுரையைச் சேர்ந்த மாணவர் கவுதம் 492 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.

தூத்துக்குடி மாணவி பாலா பிரியதர்ஷினி 2வது இடம் (490).

சென்னை சேலையூர் சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் திணேஷ் 3வது இடம் (489)

தமிழை முதல் பாடமாக எடுத்து முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள்

1. பாலா பிரியதர்ஷினி – தூத்துக்குடி.

2. திணேஷ் – சென்னை சேலையூர் சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.

3வது இடம்

1. மிருனாஸ்ரீ (487) – மதுரை டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.

2. கே.சங்கவி (487) – பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

மெட்ரிக்கில் நூற்றுக்கு நூறு..

மெட்ரிகுலேஷன் தேர்வில் கணக்கில் 1,374 பேர் 100-க்கு நூறு எடுத்துள்ளனர்.

அறிவியலில் 355 பேரும், வரலாறு-புவியியலில் 3 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வில் ..

ஆங்கிலோ இந்தியன் தேர்வில், கணிதத்தில், 245 பேரும், அறிவியலில் 27 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்..

1. கரோலின் சில்வியா (486) – செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2. விஷ்ணு பிரியா (484) – செயின்ட் ஜோசப்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
2. நிவேதா (484) -சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்.
3. ஜெய்வர்ஷினி (483) -ஹோலி ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி, தியாகராய நகர், தென்தென்னை.
3. டெலிசியா ஜெஸ்லின் (483)- செயின்ட்ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
3. ரபியா பேகம் (483)- ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
3. அவித்யா வஸ்னி (483) – ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோவை.

15ம் தேதி மதிப்பெண் பட்டியல்

மாணவ, மாணவியருக்கு ஜூன் 15ம் தேதியன்று மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.