கேட்ட அமைச்சர் பதவிகள் கொடுக்காததால் காங்கிரசின முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் என்று கடந்த வியாழன் அன்று அறிவித்தது. இருப்பினும் இரு தரப்பிலும் தொடர்ந்து அமைச்சர் பதவிகள் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்நததாக தெரிகிறது. இதனால் தி.மு.கவிற்கு 3 கேபினட் அமைச்சர்களும், ஒரு தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர் பதவியும், மேலும் 2 இணைஅமைச்சர் பதவிகளும் ஒதுக்குவதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இதனை தி.மு.கவும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
இதன்படி மு.க.அழகிரி, ஆ.ராஜா, தயாநிதி மாறன் ஆகிய மூவரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் டி.ஆர். பாலுவிற்கு மக்களவையின் துணை சபாநாயகர் பதவி அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதேப்போல் கனிமொழிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர் பதவி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேட்ட அமைச்சர் பதவிகள் கொடுக்காததால் காங்கிரசின முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் என்று கடந்த வியாழன் அன்று அறிவித்தது. இருப்பினும் இரு தரப்பிலும் தொடர்ந்து அமைச்சர் பதவிகள் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வந்நததாக தெரிகிறது. இதனால் தி.மு.கவிற்கு 3 கேபினட் அமைச்சர்களும், ஒரு தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர் பதவியும், மேலும் 2 இணைஅமைச்சர் பதவிகளும் ஒதுக்குவதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இதனை தி.மு.கவும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
இதன்படி
- மு.க.அழகிரி,
- ஆ.ராஜா,
- தயாநிதி மாறன்
ஆகிய மூவரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும்
- டி.ஆர். பாலுவிற்கு மக்களவையின் துணை சபாநாயகர் பதவி
அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதேப்போல்
- கனிமொழிக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணைஅமைச்சர் பதவி
ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.