குமரி கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் குளச்சல், நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதியில் கடல் அரிப்பு தடுப்புசுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர்புகுந்தது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன் தொடர்ச்சியாக வீடுகள் இடிந்து விழுந்தன.
குமரி கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையும் தீவிரம் அடைந்ததுள்ளது, இதனால், கடந்த மூன்றாவது நாளாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
அத்துடன், குளச்சல் பகுதியில் நேற்று நள்ளிரவு கடும் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
நித்திரவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் பலத்தகாற்றுடன் கன மழை பெய்தது. இரயுமன்துறை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
கடல் அரிப்பு தடுப்புசுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர்புகுந்தது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன் தொடர்ச்சியாக வீடுகள் இடிந்து விழுந்தன.
தொடர்ந்து இன்றும் மூன்றாவது நாளாக தொடர் மழை பெய்கிறது. கடல் சீற்றமும் காணப்படுவதால் பொது மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யும்…
இதற்கிடையே வங்க கடலில் உருவாகியிருந்த `ஐலா’ புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும், காற்று பலமாக வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தரைக்காற்று பலமாக வீசும் என்றும் சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.