பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 34 கேபினட் அமைச்சர்கள் இடம்பெறுகிறார்கள்.
ஏற்கனவே பதவியேற்ற பிரதமர் உட்பட 20 பேர் தவிர மேலும் 14 கேபினட் அமைச்சர்கள் வியாழனன்று பதவியேற்க உள்ளனர் என்றும், இறுதிப் பட்டியல் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் பல சுற்று ஆலோசனை நடத்தி இன்று இறுதிப் பட்டியலை முடிவு செய்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாளை பதவியேற்க இருக்கும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடமும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடமும், பிரதமரும், சோனியா காந்தியும் இன்று தொலைபேசியில் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் எம்.பிக்களான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, சச்சின் பைலட் ஆகியோர் இணையமைச்சர்களாகப் பொறுப்பேற்கிறார்கள். சசிதரூர், விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறார்கள்.
ஏற்கனவே சட்ட அமைச்சராக இருந்த ஹெச்.ஆர். பரத்வாஜ், உள்துறை அமைச்சராக இருந்து மும்பை தாக்குதலுக்குப் பின் ராஜினாமா செய்த சிவராஜ் பாட்டீல் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
- சச்சின் பைலட்,
- சசி தரூர்,
- மல்லிகார்ஜூன கார்கே,
- கே.எச். முனியப்பா,
- வீர்பத்ர சிங்,
- தயாநிதி மாறன்,
- ஃபரூக் அப்துல்லா,
- அஜய் மக்கான்,
- ஜி.கே. வாசன்,
- டி. புரந்தரேஸ்வரி,
- பல்லம் ராஜூ,
- ஜிதன் பிரசாதா, ஸ்
- ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்
ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் பேச்சு நடத்தியுள்ளனர்.
பிரபுல் படேல் உள்பட 7 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும் திமுகவின் பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன், புதுவை நாராயணசாமி உள்பட 38 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்
இவர்கள் அனைவரும் நாளை விரிவாக்கத்தின் போது அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள்.