குஜராத் கலவரம் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
குஜராத்தில் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து (இந்த தீ வைப்பு சம்பவத்தையும் , நரந்திர மோடி தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை தெஹல்கா அம்பலபடுதியதை நியாபகம் இருக்கலாம்) குஜராத்தில் நடந்த பயங்கர கலவரத்தில் 1000 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது பற்றி விசாரித்து 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த புகார் மீதான விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு நேற்று தொடங்கியது. இது பற்றி ராகவன் கூறுகையில்,”இப்போது தான் விசாரணையை தொடங்கியுள்ளோம். குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் அரசு வக்கீல்களாக பணியாற்ற வக்கீல்களின் பட்டியலை மாநில அரசிடம் கொடுக்க உள்ளோம்” என்றார்.