பெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் சிறைபிடித்தனர்.

பெரியாறு அணை பகுதிக்கு வழக்கமான ஆய்வு பணிக்கு சென்றுவிட்டு மாலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திரும்பி கொண்டிருந்தனர்.

mperiyarஅப்போது அங்கு வந்த கேரள வனத்துறையினர் தமிழக பொதுப்பணித்துறையை சேர்ந்த செயற் பொறியாளர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், உதவிப் பொறியாளர் தினேஷ்கண்ணன், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோர் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டதாக கூறி அவர்களை தடுத்தனர்.

பின்பு, கேரள வனத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் சிறைப்பிடித்து வைத்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பொறியாளர் தினேஷ், படகு டிரைவர் முரளி, தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோரையும் கேரள வனத் துறையினர் இரவு 8 மணி அளவில் சிறை பிடித்தனர்.

இது குறித்து தகவல் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்தனர்.