cloud-rainவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி மேற்கு வங்காளத்தை தாக்கியது. இதனால் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வங்க கடலின் வடக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வமையம் கூறியுள்ளது.

வெப்ப சலனம் காரணமாக மாலையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரிலும் ஆங்காங்கே மழை பெய்யும். இது தவிர தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைகிறது. இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திரா, மாநிலங்களின் பெரும் பகுதியிலும், ஒரிசா கடற்கரைபகுதிகளிலும் அடுத்த 48மணி நேரத்தில் பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளது என்றும்,வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.