மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே குறியீட்டு எண்கள் சரியத் தொடங்கின. பின்னர் மதியம் 12.30 மணிவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் காணப்பட்ட பங்குச் சந்தை அதன் பிறது மீண்டும் சரியத் தொடங்கியது.

இறுதியில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவடைந்து குறியீட்டு எண் 14522 ஆக இருந்தது. இதேப் போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 161 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 1356 ஆக இருந்தது