மிகாயீல்(மைக்கேல் ஜாக்சனின்) உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படும் என்று செய்திவெளியாகி உள்ளது.

0625_jackson_body_arrive_foxஉலகம் முழுவதுமுள்ள பாப் இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் கடந்த ஜூன் 25 ஆம் தேதியன்று மிகாயீல்(மைக்கேல் ஜாக்சன்) மரணமடைந்தார்.

அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இஸ்லாமிய முறைப்படியே மிகாயீல்(மைக்கேல் ஜாக்சனின்) உடல் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாக்சன் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும், தமது புதிய மத நம்பிக்கையின் அடிப்படையில் இஸ்லாமிய முறைப்படியே தமது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று தமது உயிலில் மிகாயீல்(மைக்கேல் ஜாக்சன்) தெரிவித்துள்ளதாகவும் பிரபலங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் X 17 என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.

மிகாயீல்-ன் விருப்பப்படியே அவரது உடலை இஸ்லாமிய மத முறைப்படி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் , கலிஃபோர்னியாவின் நெவர்லாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஜாக்சனின் பண்ணை வீட்டில் நாளை வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் ஜாக்சனின் குடும்பத்தினர் இது குறித்து எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை.