gujarat_liquorகுஜராத் மாநிலத்தில், கள்ளச்சாராயம் சாவு எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதை அடுத்து மோடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குஜராத் சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் கள்ளச்சாராயம் விவகாரம் எதி‌ரொலித்தது. கள்ளச்சாராய சாவு குறித்து சட்டசபையில் 2 மணி நேரம் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என காங்.., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு சபாநாயகர் அசோக் பட் மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த காங்., எம்.எல்.ஏ.,க்கள் அவை நடுவே வந்து கூச்சலிட்டனர். ஜன்னல்களை உடைத்தனர். சட்டசபையில் இருந்த தலைவர்கள் படத்தை நொறுக்கினர். இதனால், ச‌ட்டசபையில் கடும் அமளி நிலவியது.

நேற்று சட்டசபை கூட்டத் தொடரில் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்ட காங்., எம்.எல்.ஏ.,க்கள் 7 பேரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.