வடக்கு அயர்லாந்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று பெல்பாஸ்ட் நகரில் உள்ள இந்திய சமூக மையத்துக்கு புராடஸ்டன்ட் பிரிவு தீவிரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மையம் தவிர இஸ்லாமிய மையம், போலந்து நாட்டு மையம், ருமேனியா நாட்டு மையம் ஆகியவற்றுக்கும் அயர்லாந்தின் புராடஸ்டன்ட் பிரிவு தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

10-immigrants200அல்ஸ்டர் பாதுகாப்புப் படை என்ற அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு இந்தக் கடிதங்களை அனுப்பியுள்ளது.

எங்கள் ராணியின் நாட்டிலிருந்து உடனடியாக வெளியாறாவிட்டால் உங்களுக்கு மன்னிப்பு கிடையாது, வெடிகுண்டுத் தாக்குதல்களை எதி்ர்கொள்ளத் தயாராகுங்கள் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வடக்கு அயர்லாந்தில் இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு இந்தியர்கள் குறைந்த அளவே வசித்தாலும் மிக வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.

பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அங்கு கிளைகள் உள்ளன. பெல்பாஸ்ட் இந்திய சமூக மையம் கடந்த 1981ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

அங்குள்ள கார்லிசில் மெதோடிஸ்ட் மெமோரியல் சர்ச் வளாகத்தில் இது செயல்பட்டு வருகிறது.

வடக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனி பிராந்தியமாகும். அங்கு இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் கோரி பல்லாண்டுகள் தீவிரவாத போராட்டம் நடந்து வந்தது. இப்போது தான் அது சற்று அடங்கியுள்ளது.

சமீபகாலமாக ருமேனியர்களை குறி வைத்து அங்கு தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனால் ஏராளமான ருமேனியர்கள் வடக்கு அயர்லாந்தை விட்டு வெளியேறி வரும் நிலையில் இந்தியர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது