லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும். பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

babri-mosque-destructio

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்னதாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னதாக மதவெறி கும்பல் ஒன்று பாபர் மசூதியை இடித்தது. அது குறித்து விசாரணை நடந்த லிபரான் கமிஷன் அமைக்கப்பட்டது.

பொதுவாக எந்தவொரு விசாரணை அறிக்கையும் 6 மாதங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால், லிபரான் தனது அறிக்கையை அரசு அளிக்க சுமார் 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிலரின் உள்நோக்கம் காரணமாக இந்த கமிஷன் சுமார் 48 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மக்களு முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அந்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.

இந்த பிரச்சனையின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும் என்றார் திருமாவளவன்