குஜராத் கலவரம் பற்றி மோடியிடம் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
IND2064B.JPGகுஜராத் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சங்கர்சிங் வகிலா நிருபர்களிடம் கூறிய தாவது:-

குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழுவுக்கு முதல்-மந்திரி நரேந்திர மோடி சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

இந்த குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. ஆனால் அதை நரேந்திரமோடி பொருட்படுத்தவில்லை.

அதே நேரத்தில் கலவரம் தொடர்பாக குஜராத் அரசு அமைத்த நானாவதி கமிஷனுக்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்.

சிறப்பு விசாரணை குழு நரேந்திர மோடி மற்றும் கலவரத்துக்கு காரணமான மந்திரிகள் இதில் தொடர் புடைய போலீஸ் அதிகாரிகள் அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.

நரேந்திரமோடி, மற்றும் மந்திரிகளிடம் மயக்க மருந்து கொடுத்து நடத்தப்படும் உண்மை அறியும் சோதனை நடத்த வேண்டும்.

மோடி அரசு மது விலக்கை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் தான் கள்ளச்சாராய சாவுகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.