சாதாரண காய்ச்சலுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படுமோ அவையே பன்றி காய்ச்சலுக்கும் ஏற்படுகின்றன.
- காய்ச்சல்,
- இருமல்,
- தொண்டை வலி,
- உடல்வலி,
- தலைவலி,
- குளிர் காய்ச்சல்,
- சோர்வு மற்றும்
- வாந்தி
போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. பன்றி காய்ச்சலால் உண்டாகும் நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சுக்குழல் நோய்களால் கடந்த காலத்தில் சிலர் இறந்தும் உள்ளனர்.
சாதாரண காய்ச்சல் பலருக்கு வந்துவிட்டாலே மருத்துவ துறை பாதிப்புக்குள்ளாகுகிறது. மக்களிடையில் பீதியை உருவாகுகிறது. அதுபோல பன்றி காய்ச்சலும் மருத்துவ சிகிச்சை தொடர்பான சூழ்நிலைகளில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.
இனிமேல் காய்ச்சல் வந்துவிட்டால் சாதாரண காய்ச்சல் தானே. ஓய்வெடுத்து ஒரு மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. இந்த பன்றி காய்ச்சலும் கூட மிதமாகவோ அல்லது கடுமையாகவோ தாக்கக்கூடியது. இதுவரை பெரியளவில் உயிரிழப்பு ஏற்படுத்தாத இந்த பன்றிக்காய்ச்சல் இவ்வாண்டு உலகையே நடுங்கவைக்கும் அளவுக்கு உயிரிழப்பு ஏற்படுத்தி வருகிறது.
இது இரண்டு விதங்களில் பரவுகிறதாம்.
- பன்றிகளுடன் அதிக தொடர்பு அல்லது பன்றி பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அல்லது பன்றிக் காய்ச்சல் நச்சுயிரியால் கேடுற்ற சுற்றுப்புற சூழ்நிலைகளால் பரவுகிறது.
- அடுத்ததாக பன்றிச்காய்ச்சல் தொற்றியுள்ள நபரிடமிருந்து பிறருக்கு பரவுகிறது.
சாதாரண காய்ச்சல் பரவுவதைபோல, குறிப்பாக இருமல் மற்றும் தும்மல் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. இது ஒரு தொற்றுநோய்.
இக்காய்ச்சல் வந்துவிட்டால் அதன் அறிகுறிகள் இருக்கும் வரை அது பிறருக்கு பரவும் வாய்ப்பு உண்டு. நோய் தொடங்கிய ஏழு நாட்களில் இந்நோய் பிறருக்கு அதிகமாக பரவுகிறது.
தடுப்பூசி இல்லை
குழந்தைகள், குறிப்பாக சின்னஞ்சிறிய குழந்தைகளிடமிருந்து அதிக நாட்கள் நோய் பரவுமாம். பறவை காய்ச்சல் உருவாக காரணமாக இருக்கும் நச்சுயிரி தனது இயல்பையும், மரபணுவையும் அடிக்கடி மாற்றிக்கொள்வதை போல தான் பன்றிக்காய்ச்சல் நச்சுயிரியும் உள்ளது. எனவே இதனை தடுப்பதற்கென தடுப்பூசி இல்லை.
சில நாடுகளின் சுகாதரா அதிகாரிகள் oseltamivir (Tami flu) அல்லது zanamivir (Relenza) என்று பொதுவாக நச்சுயிரி எதிர்ப்புக்கும், தடுப்புக்கும் பயன்படும் மருந்தை பன்றி காய்ச்சலின் நச்சுயிரிகளை தடுப்பதற்கும் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் உடலில் பரவியுள்ள பன்றி காய்ச்சல் நச்சுயிரி அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அதன் மேலதிக சிக்கல்களை தடுக்கலாம்.
இதற்கு எந்த தடுப்பூசிகளும் இல்லாததால் நச்சுயிரிகள் பரவாமல் தடுப்பதற்கான செயல்பாடுகளை நாம் நாள்தோறும் தொடர்வது அவசியம். இருமல் மற்றும் தும்மலுக்கு பின் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது, நோயாளிகளுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பது ஆகியவை முக்கியமானவை.
இந்த காய்சச்ல் வந்துவிட்டால் அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கோ செல்லாமல் பிறருடன் உள்ள தொடர்பை குறைத்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாகத்தான் நச்சுயிரிகள் அதிகமாக பரவுகின்றன. எனவே நோயாளிகளின் இந்த உடல் உறுப்புகளை பிறர் மட்டுமல்ல நோயாளிகளும் தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொள்ளைநோய்கள் பற்றி நபிகள் (ஸல்)
அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். புஹாரி :3473 உஸாமா பின் ஜைது (ரலி).
உலக சுகாதாரத்தை பற்றி மற்ற நாடுகளை விமர்சிக்கும் மேலை நாடுகள் ! தங்கள் நாட்டில் இருந்து பரவிய இந்த கொள்ளை நோய் ! கண்டுபிடிக்கப்பட்ட பின்,
இஸ்லாம் சொல்லும் இந்த எளிய சுகாதார விஷத்தை பின்பற்றி இருந்தால் , உலகம் முழுவதும் இந்த கொள்ளை/ கொள்ளி நோய் பரவாமல் தடுத்திருக்கலாம்.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம். நோய் வந்த பின்னர் அதனை தீர்க்க எடுக்கும் முயற்சிகளை விட நோய் வருமுன் காப்பதே மேல்.
what is the symproms off swine flu?