தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.280 உயர்ந்தது. இன்னும் சில தினங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்தை நெருங்கிவிடும்.

சர்வதேச பொருளாதார நெருக்கடி, பங்கு சந்தை சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் வரலாறு காணாதவகையில் ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 500 விற்பனை ஆனது. இதன் பின்பு சர்வதேச அளவில் பங்குகளின் விலை உயர்ந்ததை தொடர்ந்து தங்கம் விலை ரூ.10,960 ஆக சரிந்தது.

ஆனாலும் ஒரு நிலையில் இல்லாமல் கூடுவதும் குறைவதுமாக இருந்தது தங்கத்தின் விலை.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,416-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.11,328-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.11,608 ஆக உயர்ந்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் தங்கம் விலை ரூ.12 ஆயிரத்தை எட்டிவிடும் எனத் தெரிகிறது.