அமெரிக்க வங்கிகளின் மூடுவிழா தொடர்கிறது. சனிக்கிழமை ஒரே நாளில் மேலும் 5 வங்கிகள் மூடப்பட்டன. இவற்றுடன் சேர்த்து, பொருளாதார மந்தத்துக்கு பலியான வங்கிகளின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு 25 வங்கிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட மூன்று மடங்கு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன.

சனிக்கிழமை திவாலான வங்கிகள் விவரம்:

  • ஃபர்ஸ்ட் பாங்க் ஆப் கன்ஸாஸ்,
  • வன்டஸ் வங்கி,
  • பிளாட்டினம் கம்யூனிட்டி வங்கி,
  • ஃபர்ஸ்ட் ஸ்டேட் வங்கி மற்றும்
  • இன்பேங்க்.

இந்த ஐந்து வங்கிகளும் மோசமான நிதி நெருக்கடிக்கு உள்ளானதால் மூடப்பட்டதாக பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது.

இந்த ஐந்த வங்கிகள் திவாலானதால் 403 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் மட்டுமே 15 வங்கிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக அமெரிக்க நிதித் துறை கூறினாலும், மறுபுறம் வேலையின்மை விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவு 9.7 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. வங்கிகள் திவாலாவது தொடர்கிறது. சிறுவங்கிகள் மூடுவிழாவுக்குத் தயாராகி வருகின்றன.