சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் அக்டோபர் 11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ராஜா அண்ணாமலைபுரம் சீனிவாசா அவென்யூ, ராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

எஸ்.எஸ்.எல்.சி. தவறியவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 முடித்தவர்கள், பட்டதாரிகள் முகாமில் கலந்துகொள்ளலாம்.
வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் தகுதியுடையவராவர். முகாமில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. முகாமிற்கு வரும்போது அனைத்து கல்விச்சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை எடுத்துவர வேண்டும்.

படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் கஷ்டப்படும் மாணவ – மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் டி.விஜயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.