ரஷியா சென்று திரும்பிய மோடி பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதனையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் தனியறையில் வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால், மோடி கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.

பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உடல்நிலை தேறிவருகிறார் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு சனிக்கிழமை தெரிவித்தது.

 

மோடிக்கு காய்ச்சல் மற்றும் இருமல் குறைந்துள்ளது. அவர் ஒருவாரம் ஓய்வில் இருந்தால் முற்றிலும் குணமடைந்துவிடுவார். அவருடைய உடல்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று மருத்துவ குழுவில் ஒருவரான அடூல் படேல் தெரிவித்தார்