துபாயில் இன்று தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இன்றே பக்ரீத் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. பல்வேறு நாட்டு முஸ்லீம் பெருமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதையடுத்து குர்பானி கொடுப்பது நடைபெற்றது. ஒட்டகங்கள், ஆடுகள், மாடுகள் ஆகியவை பலியிடப்பட்டன.

கேரளத்திலும் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது