எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ள மாணவி ஜாஸ்மின், வீதி வீதியாக தெருக்களில் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள் ஆவார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தந்தை சேக் தாவூது, தெருத்தெருவாக ஜவுளித் துணி விற்கும் தொழிலாளி ஆவார்.

ஜாஸ்மின் படித்த பள்ளியில் இந்த ஆண்டு 522 மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். அவர்களில் 504 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97 சதவீத தேர்ச்சியாகும்.

ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறுகையி்ல், சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மார்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 98 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

ஜாஸ்மின் தந்தை எஸ். ஷேக்தாவூது, இரு சக்கர வாகனத்தில் ஜவுளிகளை வைத்து ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். தாய் நூர்ஜஹான், இல்லத்தரசி. திருநெல்வேலி நகரம் ராவுத்தர் காம்பவுண்டில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

 தமது பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சேர்ந்து கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்து எதிர்காலத்தில் பொறியாளராக வருவதே தனது லட்சியம் என்றார் ஜாஸ்மின்.

  பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் படிப்பில் என் மீது காட்டிய ஆர்வம் இந்தளவுக்கு மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்தது என்றும், டியூஷன் எதுவும் படிக்கவில்லை என்றும் ஜாஸ்மின் தெரிவித்தார்.

பிளஸ்-1ல் கம்ப்யூட்டர் பாடப் பிரிவில் சேரவுள்ளேன். எதிர்காலத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக விருப்பம். பட்டப் படிப்புக்குப் பின் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவும் ஆசைப்படுகிறேன் என்றார்.

ஜாஸ்மின் தந்தை எஸ். ஷேக்தாவூது, இரு சக்கர வாகனத்தில் ஜவுளிகளை வைத்து ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். தாய் நூர்ஜஹான், இல்லத்தரசி. திருநெல்வேலி நகரம் ராவுத்தர் காம்பவுண்டில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

 தமது பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சேர்ந்து கணினி அறிவியல் பாடம் எடுத்து படித்து எதிர்காலத்தில் பொறியாளராக வருவதே தனது லட்சியம் என்றார் ஜாஸ்மின்.

 பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் படிப்பில் என் மீது காட்டிய ஆர்வம் இந்தளவுக்கு மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்தது என்றும், டியூஷன் எதுவும் படிக்கவில்லை என்றும் ஜாஸ்மின் தெரிவித்தார்.

   மாணவி ஜாஸ்மின் மதிப்பெண்கள்

தமிழ்                     98

ஆங்கிலம்          99

கணிதம்              100

அறிவியல்         100

சமூக அறிவியல்     98

மொத்தம்                   495

ஜூன் 15-ல்  மதிப்பெண் சான்றிதழ்

பள்ளி மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஜூன் 15-ம் தேதி வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் ஜூன் 15-ல்  மதிப்பெண் சான்றிதழ்

பள்ளி மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஜூன் 15-ம் தேதி வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது சம்பந்தமான மற்ற செய்திகளை பார்க்க …

முதலிடம் பிடித்த ஜாஸ்மீனை நேரில் சந்தித்து பரிசு வழங்கி TNTJ….