பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்களை தேதி வாரியாக தனது இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

வருகிற 28ம் தேதி பொறியியில் கவுன்சிலிங் தொடங்குகிறது. அன்றைய தினம் விளையாட்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். பின்னர் தொழில் கல்வி பிரிவினருக்காக 29ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெறும்.
அதைத் தொடர்ந்து 4ம் தேதி ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.

5ம் தேதி பொது கவுன்சிலிங் தொடங்குகிறது. இது ஒரு மாதம் நடைபெறும்.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொது கவுன்சிலிங்குக்கான கட் ஆப் தவிர்த்து மற்ற பிரிவினருக்கான தேதி வாரியான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாணவ, மாணவியர் கவுன்சிலிங்குக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது.