பண்ருட்டியில் மாணவ, மாணவியருக்கு பைபிள் வழங்கிய இரண்டு பள்ளிகளில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி கஸ்தூரிபாய் தெருவில் உள்ள புனித அன்னாள் நிறுவனத்தின் கீழ் உள்ள முத்தையர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜான்டூயி பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பைபிள் வழங்கப்பட்டது.

பைபிள் வழங்கிய மாணவ, மாணவியர் கட்டாயமாக படிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக இரண்டு பள்ளிகளிலும் 50க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகையிட்டு பள்ளி தலைமை ஆசிரியர், நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், வரும் 16ம் தேதி இந்து ஆன்மிக பேரவை சார்பில் இரண்டு பள்ளிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பண்ருட்டி இந்து சமுதாய ஆன்மிக பேரவை தலைவர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்துள்ளார்.