ஜப்பானில் உருவான சுனாமி அலைகள் சுமார் 7,500 கி.மீ. தூரம் பயணித்து அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியைத் தாக்கின. இதில் ஒருவர் பலியானார்.

சுமார் 2.4 மீட்டர் உயரம் கொண்ட அலைகள் கலிபோர்னியா மற்றும் ஓரேகோன் பகுதிகளைத் தாக்கின. இதில் சாண்டா க்ரூஸ் உள்ளிட்ட பல துறைமுகங்கள் சேதமடைந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன.

கலிபோர்னியாவில் டெல் நோர்டே கவுன்டியில் க்ளாமத் ஆறு கடலில் கடக்கும் இடத்தில் சுனாமி அலைகள் தாக்கியதில் 25 வயதான வாலிபர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஹவாயிலும் சுனாமி அலை:

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பசிபிக் கடல் பகுதியையொட்டிய ரஷ்யா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, மெக்சிகோ, கவுதமலா, எல்சால்வடார், கோஸ்டாரிகா, பனமா, சிலி உள்பட 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஹவாய் தீவுகளிலும் சுனாமி அலை தாக்கியது. ஆனால் அவை உயரம் குறைவாக இருந்ததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

அதே போல அமெரிக்காவின் நார்த் கரோலினாவிலும் சுனாமி பீதி நிலவியது. ஆனால், அந்தப் பகுதியை அலைகள் அடையவில்லை.