சபரிமலையில் மகரவிளக்கு மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் மகரஜோதி எவ்வாறு தோன்றுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தேவசம்போர்டு நேற்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மகரஜோதி வேறு, மகரவிளக்கு வேறு. மகரஜோதி என்பது ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரம். மகரவிளக்கு என்பது பொன்னம்பலமேட்டில் மனிதர்களால் ஏற்றப்படுகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு உருவாவதற்கு முன்னரே காலம் காலமாக பொன்னம்பலமேட்டில் ஆதிவாசிகள் ஏற்றும் தீபம்தான் மகரவிளக்கு.

மகரவிளக்கை புனிதமாகக் கருதி பக்தர்கள் வருவதால் தேவசம்போர்டே அதே பகுதியைச் சேர்ந்தவர்களை வைத்து தீபம் ஏற்றி வருகிறது. உயர் நீதிமன்றம் அனுமதித்தால் இனிமேல் அப்பகுதியில் பூசாரிகளை வைத்து தீபாராதனை நடத்த தேவசம்போர்டு தயாராக உள்ளது. இதற்கு வனத்துறை மற்றும் மின்வாரியத்துறை அனுமதி தேவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

COURTESY : Thats tamil

THE HINDU : http://www.hindu.com/2011/01/22/stories/2011012263371300.htm

அனால்  தினமலர் செய்தி மட்டும் நேருக்கு மாறாக , வெளியிட்டுள்ளது ….

சபரிமலை அய்யப்பன் கோவிலின் அருகே, பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதி இயற்கையாய் நிகழ்வது, அது மனிதர்களால் ஏற்றப்படும் தீபம் அல்ல என, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

தினமலர் செய்தி சரியா .. அல்லது மற்ற பத்திரிக்கை செய்தி அனைத்தும் பொய்யா., மக்கள் முடிவு செய்யட்டும் .