தமிழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்காக 2.30 லட்சம் விண்ணப்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை-கவுன்சிலிங் குறித்து மன்னர் ஜவகர் கூறுகையில், மே 16ம் தேதி முதல் என்ஜினீயரிங் விண்ணப்பங்கள் வினியோகிகப்படும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 2 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

அதனுடன் தகவல் குறிப்பேடும் வினியோகிக்கப்படும். அதில் கவுன்சிலிங்கிற்கு இடம் தரக்கூடிய அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் பெயர்கள், முகவரிகள், அங்கு என்ன என்ன படிப்புகள் உள்ளன, அவற்றில் எத்தனை இடங்கள் உள்ளன போன்ற அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் 62 இடங்களில் விண்ணப்பங்கள் விற்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்கள், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். மற்றும் சில வங்கிக் கிளைகளிலும் இவை கிடைக்கும்.

பிளஸ்2 தேர்வு எழுதிவிட்டு என்ஜினீயரிங் படிக்க முடிவு செய்துள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் எத்தனை மார்க் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ற கல்லூரியை தேர்வு செய்யுங்கள். கல்லூரிக்கு சென்று எத்தகைய சூழ்நிலையில் உள்ளது. அங்கு தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா?, கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்களா என்று விசாரித்து அறியுங்கள் என்றார்

Advertisements