ஹமாஸ் நிர்வாகத்தில் உள்ள காசா மீது கடுமையான மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் பிரயோகித்தது. அதனை உலக நாடுகள் மற்றும் நடுநிலையாளர்கள் கடுமையாக கண்டித்தனர். இவ்வாறு வேதனை செய்திகளே பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்த சூழலில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற இருக்கும் பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பதாஹ், ஹமாஸ் இரண்டு இயக்கங்களும் கூட்டாக அரசமைக்க ஓர் ஒற்றுமை ஒப்பந்தம் எட்டியிருப்பதாக  செய்திகள் குறிப்பிட்டன.

இதன் மூலம் ஹமாஸ் பதாஹ்  இடையே நிலவி வந்த நான்காண்டு  பிணக்குகள் தேர்ந்து இணக்கம் நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சமாதான ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதும் வாகனங்களில்   சென்றவர்கள் தங்கள் வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரம் ஒலிக்கச் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.பதாஹும் ஹமாசும் ஒரு தாய் மக்கள் இனி வேறுபாடு கிடையாது என முழங்கினர். தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் உணவகங்களில் தேநீர் காபி மற்றும் பழரசங்கள் இலசமாக சாலைகளில் சென்றோருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

இதற்கு நேர்மாறாக, இஸ்ரேல் தரப்பில் விரக்தியும் ஆத்திரமும் பொங்கி வழிந்தது.பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வெளிப் படையாக தனது எரிச்சலை வெளிப்படுத்தி னார்.  பாலஸ்தீன நிர்வாகம் அமைதி யை விரும்புகிறதா அல்லது ஹமாஸை விரும்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த பதாஹ் நிர்வாகி ஒருவர், இஸ்ரேல் அமைதியை விரும்புகிறதா? அல்லது  இனவெறியை  நிலை நிறுத்த பாலஸ்தீன  மக்களின் நிலத்தில் குடியிருப்புகளை மேலும் மேலும் உருவாக்க விரும்புகிறதா? என்று வினவினார்.

இஸ்ரேல் ஹமாஸை அங்கீகாரம் செய்யவில்லை; ஹமாஸ் இஸ்ரேலை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இது பாலஸ்தீன அரசியல் அரங்கில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளி ஹோஸ்னி முபாரக் வீழ்த்தப்பட்ட பிறகு  இஸ்ரேலுக்கு ராஜதந்திர  ரீதியில் கிடைத்த மிகப்பெரிய அடியாக இது கருதப்படுகிறது.

பலஸ்தீனத்தின் ஹமாஸ், பதாஹ் அமைப்புகள் வியாழக்கிழமை ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இதன்மூலம் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினதும், ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்குலக உதவியை பெறுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 90 பேர் பலியாவதற்கு காரணமாகவிருந்த கடுமையான மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான மெக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரிடையே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனினும், பதாஹ் அதிகாரிகளால் வாசிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட உடன்படிக்கையில் இஸ்ரேலை அங்கீகரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி அப்பாஸ் வெளியிட்டுள்ள கடிதமொன்றில் ஹனியேயை மீண்டும் பிரதமராக நியமிப்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், புதிய அரசாங்கம் சர்வதேச சட்டங்களின் படியும் பலஸ்தீன விடுதலை இயக்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படியும், செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை இந்த உடன்படிக்கை காரணமாக நீக்கப்படுமா என்பது குறித்து பதாஹ் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கையை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், ரஷ்யா போன்றவை ஏற்றுக்கொள்ளாது என அஞ்சுவதாக பதாஹ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நாடுகள் ஹமாஸ் வன்முறையை கைவிட வேண்டும். இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளன.

ஹமாஸ் அதிகாரியொருவர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அராபிய நாடுகள் இதனை ஏற்றுக்கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இவ்வகையான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கை அமெரிக்க, இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்விக்கு, இல்லை அமெரிக்கா தனக்கென்று நிலைப்பாட்டில் உள்ளது.

சவூதி அரேபியாவும் ஏனைய அராபிய நாடுகளும் உதவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் மார்கிரட் பெக்கட் உடன்படிக்கையை சுவாரஸ்யமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தெளிவாக ஆராய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய ஐரோப்பிய சகாக்களுடன் இது பற்றி ஆராயப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய அரசாங்க பேச்சாளர், இஸ்ரேல் புதிய பலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்கும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும், கைவிடும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உடன்படிக்கை பலஸ்தீன், நலன்களிற்கு முரணாக அமையாத பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் தயாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் புதிய அரசாங்கம் குறித்த செய்தியை வரவேற்றுள்ளனர்.

துப்பாக்கிகளை ஆகாயத்தை நோக்கி சுட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

புதிய பாதையை ஆரம்பித்துள்ளோம். இது எமது நாட்டை விடுதலை செய்வதற்காக, தொடரும் என கருதுகின்றேன் என ஜனாதிபதி மமூட் அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஹனியே சர்வதேச தடை விரைவில் நீங்கும் என தெரிவித்துள்ளதுடன். ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ள பலஸ்தீன மக்கள் மீதான தடையை உடைப்பதற்கான முதல் நடவடிக்கை இதுவென குறிப்பிட்டுள்ளார்.