ரவீந்திரநாத் தாகூரின் பெயரில் சர்வதேச விருது வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவின் பிரபல கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூர் பிறந்து 150 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை, டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று  தொடங்கி வைத்தார்.

அப்போது மன்மோகன் சிங் கூறுகையில், நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பெயரில் சர்வதேச விருது வழங்கப்படும். இதன் முதல் விருது 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் வழங்கப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில, தாகூரின் படைப்புகளை மத்திய கலாச்சாரத் துறை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடும். தாகூரின் ஓவியங்கள் டிஜிட்டலில் பதிவு செய்யப்படும் என்றார்.