எதிரி ஏவுகணையை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் திறன் கொண்ட “அஸ்திரா” ஏவுகணை இரண்டாவது நாளாக நேற்றும் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
விண்ணில் பறந்து சென்று எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடை மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட “அஸ்திரா” ஏவுகணையை பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த ஏவுகணை ஒடிசா சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஆய்வு மையத்தில் நேற்று முன்தினம் சோதனை செய்யப்பட்டது. எனினும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த சோதனை நடந்தது. நேற்று காலை 10:32 மணி அளவில் போர் விமானத்திலிருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. ஒலியைக் காட்டிலும் வேகமாகச் செல்லக்கூடிய “அஸ்திரா” ஏவுகணை 3.8 மீற்றர் நீளமும், 178 மில்லி மீற்றர் குறுக்களவும் கொண்டது. இதன் எடை 160 கிலோ.