தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோவை பிரிவு மாணவர் அணி சார்பில் வரதட்சணைக்கு எதிரான பேரணி நேற்று கோவையில் நடந்தது.
முதலில் இந்த பேரணிக்கு போலீசார் தடைவிதித்தனர். அதையும் மீறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணியைச் சேர்ந்த 200 பேர் உள்பட இளைஞர்கள், இளம்பெண்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போலீசார் தெரிவித்தனர். வரதட்சணை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேரணி என்று தெரிவித்தும் போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மஹாலில் வைத்தனர். இரவு 9.30 மணிக்கு கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் வரதட்சணை கொடுமைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் மௌலவி ரஹ்மத்துல்லா மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள், வரதட்சணை, பெண் சிசுக் கொலை போன்றவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது என்று அதன் மாணவரணி செயலாளர் அஜ்மல் தெரிவித்தார். இனி வரும் காலத்தில் பெரிய அளவில் பேரணி நடத்தவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
u dont tell, u do that first
வரதச்சனை என்ற ஒரு விசயமே இஸ்லாத்தில் இல்லை , மாறாக பெண்ணுக்கு மகர் என்ற முறைப்படி (இந்திய பாஷைப்படி வரதட்சனை ) பெண்ணுக்கு கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் ,
மேலே ஆர்ப்பாட்டம் செய்த தவ்ஹீது ஜமாத்தினர்,கடந்த 28 வருடங்களாக இந்த விஷயத்தை விளக்கி, அதன்படி செயல்பட்டும் வருகின்றனர்.
கொடுக்கப்பட்ட சுட்டி பார்த்தால் உங்களுக்கே புரியும் …
http://www.tntj.net/page/7?s=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88
சுட்டியை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறோம், இப்போ அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தலாம? , வரதட்சனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தவ்ஹீது ஜமாத்தினர் தகுதியானவர்கள் என்பது புரிகிறதா…
நல்லது செய்தால், குறைகாண விழையாமல் , அதனை ஆதரிப்பதே நல்ல மனித இயல்பு …