மும்பை தாராவி பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கலர்பொடியால் பாதிக்கப்பட்ட 144 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாராவியில் சாஸ்திரி நகரில் இன்று பிற்பகல் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. அப்போது பலரும் அலர்ஜி காரணமாக அலறியபடி லோக்மான்யா திலக் மருத்துவமனைக்கு சென்றனர். ஹோலி பொடியைப் பூசிக் கொண்ட பலருக்கு வாந்தி மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் 9 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களே அதிகம் என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.