ஜப்பானை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கிய பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கி ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு நிலநடுக்கமும், சுனாமியும் அந்த நாட்டைத் தாக்கியுள்ளதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

  கடலோரப் பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹோக்கைடோ தீவில் உள்ள எரிமோ என்ற நகரில், 10 செமீ அளவுக்கு அலைகள் உயர்ந்து எழுந்தன. இருப்பினும் இந்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை, சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.

ஜப்பானை நிலநடுக்கம் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவிலும் பீதி எழுந்துள்ளது. காரணம், சமீப காலமாக இந்தியாவின் பல பகுதிகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

click here for Related News