ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம்: கடந்த புதன்கிழமை (21.03.2012) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் பிரதேசத்தின் ராஸ் அல் அமூத் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திடீர்த் தாக்குதலுக்கு உள்ளானது. 

ஆக்கிரமிப்புப் படையினர் மீது கற்களை எறிந்ததான சந்தேகத்தின் பேரில் 11 வயதான பலஸ்தீன் மாணவன் ஒருவன் வகுப்பறையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு, ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் அடித்து இம்சிக்கப்பட்டுள்ளான். 
Image
மேற்படி சிறுவன் மீது ஏதேனும் குற்றச்சாட்டு இருக்கும்பட்சத்தில், அவனை முறையான விசாரணைக்கு உட்படுத்துமாறும், அவ்வாறு செய்வதாக உத்தரவாதமளித்தால், பள்ளிச் சிறுவனை ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் கையளிக்கத் தயார் என்றும் கூறிய பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், பள்ளிக்கூடம் மீது தாக்குதல் எதுவும் நடாத்த வேண்டாம் என மன்றாடியுள்ளார். 

எனினும், இவை எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத ஆக்கிரமிப்புப் படை, பள்ளிக்கூடத்தின் மீது சரமாரியான தாக்குதல் தொடுத்ததோடு, 11 வயதான அந்தப் பள்ளிச் சிறுவனை, மற்ற மாணவர்களுக்கு முன்னால் இழுத்துச் சென்று அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்விகற்று வரும் பலஸ்தீன் மாணவர்கள் எத்தகைய நியாயமான விசாரணைகளும் இன்றி, அடிக்கடி இத்தகைய துன்புறுத்தல்களுக்கு இரையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. “இவ்வாறான அச்சுறுத்தல்களின் மூலம், பலஸ்தீன் மாணவர் மத்தியில் பள்ளி சென்று கல்வி கற்பதை வெறுக்கும் மனநிலையை ஏற்படுத்துவதே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் ரகசியத் திட்டமாகும்” என உள்ளூர்வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்

thanks :inneram.com