தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் அல் லத்திஃபா மருத்துவமனை இனைந்து நடத்திய “மாபெரும் இரத்தான முகாம்” கடந்த 16 ஆம் தேதி மண்டல தலைவர் முஹம்மது நாஸிர் தலைமையிலும் செயலாளர் அபுதாஹிர் முன்னிலையில் நடைபெற்றது.

காலை 8.00 மணிக்கு இரத்த‌தான முகாம் தொடங்கிய நிலையில் பலரும் ரத்த தானம் அளிக்கத் திரண்டு இருந்தனர். 250 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட முகாமில் 170 பேர் ரத்த தானம் அளித்தனர். ஒரே நாளில் இத்தனை நபர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தது இதுவே  முதல் முறை என்றும்  மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம்  போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் அனைவரிடமும் ரத்தம்  எடுக்க முடியாது என்று தெரிவித்ததால் பலர் திரும்ப அனுப்பப் பட்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டல பொருளாளர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம்

அபுதாபி மண்டலத்தில் வரும் 13 ஏப்ரல் 2012  அன்று கலிபா மெடிக்கல் சிட்டி யில் , ( களிதியா , அபுதாபி ) , ரத்த தான  முகாம் நடைபெற இருக்கின்றது ,  ரத்த தானம் நடத்து அமைப்பினரிடம் இருந்து பெறப்பட்ட செய்தி ,

“தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம்
சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டு உள்ள இந்த
மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கலந்துகொண்டு
பயன் அடையுங்கள் இந்த தகவலை இன்ன பிற நண்பர்களிடம்
கொண்டு செல்லுங்கள்   

இதற்கான நற்கூலியை இறைவன் உங்களுக்கு
ஈர் உலகத்திலும் தருவதற்கு பிராத்திக்கிறோம்…………….

 “