பிரம்மோஸ் ஏவுகணை சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.

290 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை 300 கிலோ எடையிலான ஆயுதங்களை தாங்கிச் செல்லக் கூடியது. இது இந்த ஏவுகணை சூப்பர் சானிக் வகையைச் சேர்ந்தது.
இதற்கான சோதனை, ஒடிசாவின் சண்டிப்பூர் கடற்கரையில் இன்று காலை இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்டது. இந்த சோதனை தரைத்தள நடமாடும் ஏவுவாகனம் மூலம் ஏவுதள வளாகம் 3-ல் இருந்து இந்த ஏவுகணை காலை 11 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.