வரும் ஏப்ரல் 1 – ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் தமிழகத்தில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ‌வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது.

அதன்படி ஒவ்வொரு இரண்டு மாதத்துக்குமாக,

• 100 யூனிட் வரை ரூ. 2.60 .

(அரசு மானியம் ரூ.1.60 – நுகர்வோர் கட்டணம் ரூ.1.10). {தற்போது 1 யூனிட் 85 பைசா.}

• 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ரூ. 2.80

(அரசு மானியம் ரூ.1.00 – நுகர்வோர் கட்டணம் ரூ.1.80)

• 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை ரூ.4.00

(அரசு மானியம் 50 பைசா – நுகர்வோர் கட்டணம் ரூ.3.50). இதில், முதல் 200 யூனிட்களுக்கு ரூ. 3-ம், 201 வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ. 4-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

• 500 யூனிட்டுகளுக்கு மேல்- ரூ.5.75 (இதில் அரசு மானியம் கிடையாது).

• ஒவ்வொரு நுகர்வோரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் சார்ஜ் என்ற முறையில் ரூ. 20 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

• வாடகை வீட்டில் குடியிருப்போரின் சப் மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் அதிகளவு கட்டணம் செலுத்தும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுவார்கள்.

தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.

இந்த கட்டண உயர்வு மூலம் ஓர் ஆண்டிற்கு ரூ.7874 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஆண்டுக்கு ரூ.9742 கோடி வருமானம் கிடைக்கும் அளவிற்கு மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது.

Advertisements